WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 21, 2014

2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு

அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக
அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.

2015-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஜனவரி 1 (வியாழன்) ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 4 (ஞாயிறு) மீலாதுநபி

ஜனவரி 15 (வியாழன்) பொங்கல்

ஜனவரி 16 (வெள்ளி) திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 (சனி) உழவர் திருநாள்

ஜனவரி 26 (திங்கள்) குடியரசு தினம்

மார்ச் 21 (சனி) தெலுங்கு வருடப் பிறப்பு

ஏப்ரல் 1 (புதன்) வங்கிகள் கணக்கு முடிவு

(வணிக-கூட்டுறவு வங்கிகள்)

ஏப்ரல் 2 (வியாழன்) மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 3 (வெள்ளி) புனித வெள்ளி

ஏப்ரல் 14 (செவ்வாய்) தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்

மே 1 (வெள்ளி) மே தினம்

ஜூலை 18 (சனி) ரம்ஜான்

ஆகஸ்ட் 15 (சனி) சுதந்திர தினம்

செப்டம்பர் 5 (சனி) கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 17 (வியாழன்) விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 24 (வியாழன்) பக்ரீத்

அக்டோபர் 2 (வெள்ளி) காந்தி ஜெயந்தி

அக்டோபர் 21 (புதன்) ஆயுத பூஜை

அக்டோபர் 22 (வியாழன்) விஜயதசமி

அக்டோபர் 23 (வெள்ளி) மொகரம்

நவம்பர் 10 (செவ்வாய்) தீபாவளி

டிசம்பர் 23 (புதன்) மிலாதுநபி

டிசம்பர் 25 (வெள்ளி) கிறிஸ்துமஸ்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.