தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர
சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு ஓவியம், உடற்கல்வி, தையல் பயிற்சிகளை வழங்க பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு 2011ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் குறிப்பிட்ட பாடவேளைகள் (வாரத்துக்கு 3 நாள்கள்) மட்டும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர்.
இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியத்தை ரூ.7000ஆக உயர்த்தி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆணையில் (ஆணை எண் 186) கூறியிருப்பதாவது:
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 15,169 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியம் ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 தேதியிட்டு வழங்கப்படும்.
.jpg)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.