WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 8, 2014

கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வீழ்ச்சி எதிரொலி !

       பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம்பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், கடந்த 31-ந் தேதி நள்ளிரவு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. கச்சா எண்ணெய்அந்த விலை குறைப்புக்கு பிறகு, கடந்த 7 நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்து வருகிறது. கடந்த 31-ந்தேதி, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5 ஆயிரத்து 209 ரூபாய் 96 காசுகளாக இருந்தது. அது, தற்போது பீப்பாய்க்கு 4 ஆயிரத்து 939 ரூபாய் 44 காசுகளாக சரிந்துள்ளது. அதாவது, 5.19 சதவீதம் விலை சரிந்துள்ளது.விலை குறையும்கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்துள்ளதால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் மீண்டும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பான விலை குறைப்பு அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15-ந்தேதி வாக்கில் வெளியிடும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.