WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 23, 2014

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி நுழைவு தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்.

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சிக்கான நுழைவு தேர்வு எழுத,
இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய முதல்நிலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் வரும் 23ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது. நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டுகளை மைய இணையதளம் www.civilservicecoaching.com மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், தாங்கள் தேர்வு எழுத தெரிவு செய்துள்ள மாவட்ட தேர்வு மையத்திற்கு(மாவட்ட தேர்வு மைய விவரங்களை இணைய தளத்தில் காணவும்) தேர்வு நாள் அன்று 1 மணி நேரம் முன்னதாகவே சென்று நுழைவு சீட்டுக்களை பெற்று, தேர்வு எழுதலாம். சென்னை மாவட்டத்தைச் தேர்வு செய்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் 044-24621475/9940636267 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்வு மைய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.