WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 7, 2014

பள்ளி விழாவில் மது போதையில் இருந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் நீக்கம்!

திருச்செங்கோடு அரசுப் பள்ளி விழாவில் மது போதையில் இருந்த 6
மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் நீக்கம் செய்து உத்தரவிட்டார். திருச்செங்கோடு அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த வாரம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. அப்போது 12ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். அவர்களை தனி யாக அழைத்து பள்ளி தலைமை யாசிரியர் லோகநாதன் விசாரித் தார். அவர்களில் சிலர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. அவர்களை கண்டித்த தலைமை யாசிரியர், 6 பேரையும் பள்ளியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் மட்டும் வேறு ஒரு அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார். மற்ற ஐந்து மாணவர்களும் வேறு பள்ளியில் சேர சென்றுள்ளனர். எனினும், அவர்களை பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தங்களது பெற்றோருடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வெள்ளிக் கிழமை மாணவர்கள் வந்துள்ளனர். முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் கொல்லிமலைக்கு சென்றதால், அவரை சந்திக்க முடியாமல் மாணவர்கள் திரும்பியுள்ளனர். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் கூறுகையில், ‘‘6 மாணவர்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்துள்ளனர். அரையாண்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் சரியாக படிக்காமல் பள்ளியில் ஒழுங்கீனமாக அந்த மாணவர்கள் நடந்து கொண்டதால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுவர். எனவே மாணவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேசி உரிய அறிவுரை அளிக்கப்படும். ஒரு மாணவர் மட்டும் வேறு பள்ளியில் சேர்ந்துள்ளார், மற்ற ஐந்து மாணவர்களையும் வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.