WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 24, 2014

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு

                    


இந்தியாவில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் சேதமடைந்து கிழிந்த நிலையில் இருப்பதால் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

முன்னதாக அதற்காக குறிப்பிட்ட கால அவகாசமும் ரிசர்வ் வங்கி வழங்கி உத்தரவிட்டது.

மேலும், ரூபாய் நோட்டுகளில் ஆண்டு இல்லாத ரூபாய் நோட்டுகளையும், கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளையும், 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய்களையும் வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் அவ்வாறு உள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்னும் 6 நாட்களே இருந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன்வரை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. அதன்பிறகு அவற்றை செல்லாததாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.