WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 26, 2015

பொறியியல் கல்லூரிகளின் அனுமதியை புதுப்பிக்க பிப்ரவரி 20-ஆம் தேதி கடைசி: ஏஐசிடிஇ அறிவிப்பு

பொறியியல் கல்லூரிகளின் அனுமதியைப் புதுப்பிப்பதற்கும், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தகவலை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.

ஏஐசிடிஇ அமைப்பின் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் அனைத்தும்,

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கீழ் கடந்த ஆண்டு வந்தன.

அதைத்தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டது. ஆனால், இந்த வழிகாட்டுதலை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை.

இதுபோன்ற காரணங்களால் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கோ ஏற்கெனவே இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ

அனுமதி வழங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக யுஜிசி அறிவித்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து ஒடிசா தொழில்நுட்பக் கல்லூரிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 17-4-2014 அன்று

பிறப்பித்த உத்தரவில், 2014-15 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி புதுப்பிப்பு, புதிய கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி வழங்குவதற்கான அதிகாரத்தை

ஏஐசிடிஇ-யிடமே வழங்கியது. அதைத்தொடர்ந்து புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், ஏற்கெனவே இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதியை

புதுப்பிக்கவும் உரிய உத்தரவு வழங்கும் பணிகளை ஏஐசிடிஇ கடந்த ஆண்டு மேற்கொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2014 டிசம்பரில் தொடரப்பட்ட சிறப்பு விடுமுறைக்கால மேல்முறையீடு மீது உச்ச நீதிமன்றம் கடந்த 2014 டிசம்பர் 18-ஆம்

தேதி உத்தரவு ஒன்று பிற்பபித்தது.

அதில், கடந்த 17-4-2014 அன்று பிறப்பித்த உத்தரவு வருகிற 2015-16 கல்வியாண்டுக்கும் நீட்டிக்கப்படுவதாகவும், 2015-16 கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகள்

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் அனுமதி பெறுவதற்கு முன்னர், ஏஐசிடிஇ-இன் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் எனவும், அந்த உத்தரவில் தெரிவித்தது.

அதனடிப்படையில், வருகிற 2015-16 கல்வியாண்டில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்குதல், புதிய பாடங்களைத் தொடங்குதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை

உயர்த்துவது, படிப்புகளைக் கைவிடுவது, மாணவர் எண்ணிக்கையைக் குறைப்பது, கல்லூரியை இழுத்து மூடுவது என அனைத்துக்குமான விண்ணப்பங்களை

இணையதளத்தில் சமர்ப்பிக்குமாறு ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 20 கடைசித் தேதியாகும். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து அனுமதிக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான

பணிகள் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு விடும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.