WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 27, 2015

இளைஞர்களே... உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்’: கலாம்.

உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்துல் கலாம் இவ்வாறு பேசினார்.

கலாம் தனது அனுபவங்கள் குறித்து பேசியதாவது:
நான் பைலட்டாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்து படித்தேன். பைலட்டாக வருவதற்கு செலக்சன் பேனலுக்கு போன போது அங்கே 10 பேர் இருந்தார்கள். இருப்பது 9 சீட் மட்டுமே. கடைசியில் என்னை தான் கழற்றி விட்டார்கள். எனக்கு அப்போது மனமே உடைந்து விட்டது போலிருந்தது. ஆனால், என்னால் பைலட்டாக வரமுடியாமல் போனாலும், இந்த நாட்டுக்கே ஜனாதிபதியாக பின்னாளில் வந்துவிட்டேன். நான் ஜனாதிபதியானதும் விமானப்படை தளபதியிடம் எனக்கு விமானத்தில் பறக்க கற்று தருமாறு கேட்டுகொண்டேன். 6 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். இருந்தாலும் என்னால் பைலட்டாக முடியவில்லை என்றாலும் இன்று வரை என்னுடைய பறக்கும் கனவை நினைவாக்கி கொண்டுதான் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? நான் கனவு கண்டதால் நடந்தது. நான் பறக்க வேண்டும் என கனவு கண்டேன். அதனால் நடந்தது. என்னுடைய கனவுகள் எண்ணங்களானது. என் எண்ணங்கள் செயலாக மாறியது. உங்கள் கனவுகள் நனவாக உங்களுக்கு நான் ஒரு மந்திரத்தை கொடுக்கிறேன்.. ’உங்கள் திறமையின் மீது ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள்’. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் நான் கொடுத்த இந்த மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு என்ன கிடைக்கும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். அங்குதான் பிரச்சனைகள் தொடங்கிவிடுகின்றன. உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என உறுதியெடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.