தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று காலை
தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தாண்டு முதல், மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட விடைத்தாள் பக்கங்கள் வழங்கப்படுகிறது. விடைத்தாள்களை மாற்றி மோசடியில் ஈடுபட்டால் 5 வருடம் தேர்வு எழுத முடியாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி, முதன்மை செயலாளர் சபீதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.