WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 20, 2015

பி.எட்., படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு.

பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை
நடக்கின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:மே 8ம் தேதி - இந்திய சமூகத்தில் கல்வி; 9ம் தேதி - கற்றல் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, 11ம் தேதி - கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு, 12ம் தேதி - விருப்ப பாடங்கள், 13, 14ம் தேதிகளில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும். மே 15ம் தேதி - முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் பாடத்தேர்வுகள் நடக்கும்.மே 16ம் தேதி - பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி அறிவியல், உயிரி அறிவியல், வரலாறு, புவியியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும்; மே 18ம் தேதி- முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.