WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 20, 2015

ஆசிரியர்கள் விரைவில் போராட்டம்; ஜோக்டோ உண்ணாவிரதத்தில் தகவல்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தில்
இறங்குவோம் என ஜோக்டோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் தெரிவித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் நெல்லையில் திரளான ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஊதியகுழுவில் உள்ள முரண்பாட்டை நீக்கி,மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கவேண்டும். தமிழ்வழிக்கல்வியை மேம்படுத்தவேண்டும். மாணவர்களின் வருகைகுறைவை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. உண்ணாவிரத்தில் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து அரசு செவிசாய்க்கவேண்டும். இல்லாவிடில் அரசு ஊழியர்களையும் இணைத்துக்கொண்டு அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.