WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 17, 2015

ஜுலையில் நடக்கிறது அண்ணா பல்கலை பொறியியல் கவுன்சிலிங்: துணைவேந்தர்.

அண்ணா பல்கலையுடன் இணைந்த பொறியியல் கல்லுாரிகளில்
சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் வழங்கப்படும்; ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 16 பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர, 593 அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், மொத்தம் 2.5 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களின் அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை, ஒற்றை சாளர முறையில், அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், பிளஸ் 2 தேர்வு முடிவு வருவதற்கு ஒரு வாரம் முன் வினியோகிக்கப்படும். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு, மே முதல் வாரத்தில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது: மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு, தேர்வுகள் மற்றும் கவுன்சிலிங் நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலையின் பொறியியல் விண்ணப்பங்கள், மே முதல் வாரத்திற்குள் வினியோகம் செய்யப்படும். பின், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது; இதன் தேதி விவரங்களை தமிழக அரசு வெளியிடும். அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், எத்தனை கல்லுாரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும்; எத்தனை கல்லுாரிகளில் எத்தனை படிப்புகள் உள்ளன; புதிய படிப்புகள் போன்ற விவரங்கள், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகார அறிவிப்பு வந்ததும் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.