WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 17, 2015

வரும் 20ம் தேதி 10 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது. குழப்பமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நாளையுடன் பெரும்பாலான இடங்களில் முடிகிறது. 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது.
வரும் 27ம் தேதிக்கு முன், திருத்தும் பணியை முடிக்க தேர்வுத் துறை காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், 30ம் தேதி வரை, திருத்தும் பணி நடக்கும் என்று தெரிகிறது. 10ம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாளில், ஐந்து மதிப்பெண்ணுக்கான முதல் கேள்வியில், இரண்டு மதிப்பெண்களுக்கு விடைகள், குழப்பமாக அமைந்ததாக புகார் எழுந்தது. சமூக அறிவியல் தேர்வில், ஐந்து மதிப்பெண் மற்றும் பத்து மதிப்பெண்களுக்கான சில வரைபடங்களில், அச்சுக் கோளாறு இருந்ததாக புகார் எழுந்தது. எனவே, இந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.