அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியில் 4,362 காலியிடங்களுக்கு ஏறத்தாழ 9 லட்சம் பேர் விண்ணப் பித்துள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) 4,362 காலியிடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் அறிவி்ப்பு வெளி யிடப்பட்டது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கியது. தேர்வர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல் வேறு இடங்களில் சிறப்பு சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. முதல் நாளில் விண்ணப்பிக்க அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல கூட்டம் அலைமோதியது. கடைசி நாளைக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை வரையில் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதியான நேற்று சென்னை உள்பட அனைத்து மாவட்டங் களிலும் சேவை மையங்களில் தேர்வர்கள் கூட்டம் அலைமோதி யது. நேற்று மட்டும் ஒரேநாளில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆய்வக உதவியாளர் பணிக்கு இதுவரை 9 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர். முதல்கட்டமாக, எழுத்துத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெறுவோர் “ஒரு காலியிடத்துக்கு 5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு, உயர்கல்வித்தகுதி, பணிஅனுபவம், கேள்விக்கு பதில் அளித்தல் ஆகியவற்றுக்கு தனித் தனியே குறிப்பிட்ட மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப் படையில் இறுதி பணிநியமனம் நடைபெறும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.