அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்திய ஆசிரியர்களின் படைப்புகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வு செய்தது.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, டில்லியில் நடந்த கருத்தரங்கில், செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த ஆசிரியர் திலிப், அமெரிக்காவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மாத இறுதியில், அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில், இந்தியாவிலிருந்து திலிப்குமார் உள்ளிட்ட 13 பேர் உட்பட, 87 நாடுகளிலிருந்து 300 பேர் பங்கேற்றனர். இதில், 100க்கு 74 மதிப்பெண் பெற்று, ஆசிரியர் திலிப், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிரியர் திலிப்பின் தகவல் தொழில்நுட்பத்தையும், பயிற்று முறையையும் மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ., சத்தியநாதல்லா பாராட்டினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு நாட்டு ஆசிரியர் குழுக்களை, வேறு நாட்டு பள்ளிகளுடன் இணைத்து, உலக அளவிலான கல்வியை கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்து, மைக்ரோசாப்ட் நிறுவன கல்விக்கான துணைத் தலைவர் ஆண்டனி சல்சிடோ அறிவித்தார். இதன்படி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், தைவான் ஆகிய நாடுகளில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதுடன், நாடுகளுக்கிடையிலான கலாசார பகிர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.