பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடத்தப்படும் இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு
கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் இதுவரை வினியோகிக்காமல் இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களின் விருப்பத்தில் அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளியில் பணியில் சேர்வது வழக்கம். கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்களை ஏப்., இரண்டாம் வாரத்தில் வினியோகிக்கவேண்டும். ஆனால், கோடை விடுமுறை துவங்கி, 10 நாட்கள் கடந்தும், எவ்வித அறிவிப்பும் வரவில்லை.கலந்தாய்வு நடத்த தாமதிக்கும் அதே சமயம், மாநில அளவில் ஒரு சில கல்வி அதிகாரிகள் இடமாறுதலுக்கு, 5 லட்சம் ரூபாய் முதல், 8 லட்சம் ரூபாய் வரை பெற்று இடங்களை மறைப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக, சில அலுவலர்கள் புரோக்கர்களாகவே செயல்படுவதாக, ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்தாசிரியர்கள் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''கலந்தாய்வு தேதி அறிவிப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள் காத்திருக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தாமதப்படுத்துகின்றனர். இதன் காரணமாக, முறைகேடுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும், இடமாறுதலுக்கு பின், வேறு பள்ளி, மாவட்டத்துக்கு செல்லவேண்டும். பள்ளிகள் திறந்த பின், ஜூன் மாதத்தில் கலந்தாய்வு நடத்தினால், எங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பல முறை கோரிக்கை வைத்தும் அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.