WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 5, 2015

ஆறு நாட்களாக முடங்கியதுவேலைவாய்ப்பக 'வெப்சைட்'

வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்' 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.

கல்வித்துறையில் 4,320 ஆய்வக உதவியாளர்களும் மருத்துவத்துறையில் 676 'லேப் டெக்னீசியன்' பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கு வேலைவாய்ப்பக பதிவுமூப்பு சீனியாரிட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் ஒரே சமயத்தில் தங்களது பதிவுமூப்பு விபரத்தை தெரிந்து கொள்ள வேலைவாய்ப்புத்துறை www.tnvelaivaaippu.gov.in 'வெப்சைட்டை' பார்க்கின்றனர்.அதேபோல் 'லேப்டெக்னீசியன்' பணியிடங்களுக்கும் மாநில அளவிலான பதிவுமூப்பு விபரம் வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்'டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 'வெப்சைட்' 6 நாட்களாக செயல்படவில்லை. இதனால் பதிவு தாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டோர் கூறுகையில், ''வேலைவாய்ப்பக அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. 'லேப்டெக்னீசியன்' பணிக்கான பதிவுமூப்பு விபரம் சரிபார்க்க முடியவில்லை,'' என்றனர்.வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியிட்டபின், பள்ளிகளில் 'ஆன்லைன்' மூலம் மாணவர்களின் பதிவுமூப்பு விபரம் பதியப்பட உள்ளது. வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்டில்' சில மாற்றங்கள் செய்வதால் 'வெப்சைட்' இயங்கவில்லை. விரைவில் சரிசெய்யப்படும். அதுவரை வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு மூப்பை சரிபார்த்து கொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.