குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பணி நியமனம் ரத்து
செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்கும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்கும்படி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
குரூப் - 1 தேர்வு:
கடந்த, 2000 - 01ல், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக, குரூப் - 1 தேர்வு நடத்தப்பட்டது. இதில், 83 தேர்வு செய்யப்பட்டு, வெவ்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.
நியமனம் ரத்து:
தேர்ச்சி பெற்றவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இவர்களின் நியமனத்தை ரத்து செய்தது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை ஏற்ற சுப்ரீம் கோர்ட், 'சம்பந்தப்பட்ட, 83 அதிகாரிகளும் பதவியில் நீடிக்கலாம்' என, கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இவர்களில், ராஜினாமா செய்தவர்கள், வேறு பணிகளுக்கு சென்றவர்கள், இறந்தவர்கள் தவிர, 65 பேர் பணியில் உள்ளனர். இதையடுத்து, கடந்த முறை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'சம்பந்தப்பட்ட, 65 அதிகாரிகளின் விடைத்தாள்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, யு.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த, 65 விடைத்தாள்களையும் ஆய்வு செய்த யு.பி.எஸ்.சி., நிபுணர் குழு, சீலிடப்பட்ட உறையில் வைத்து, நீதிபதிகள் அனில் தாவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
அறிக்கையாக தாக்கல்:
இந்நிலையில், யு.பி.எஸ்., தாக்கல் செய்த அறிக்கையில் ஏதாவது சந்தேகம், அதிருப்தி இருந்தால், அதுகுறித்து, நான்கு வாரங்களுக்குள், தங்கள் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, யு.பி.எஸ்.சி.,க்கும், மனுதாரர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, வரும், ஆகஸ்ட், 19க்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.