WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 22, 2015

தமிழகத்தில் பி.எட், எம்.எட் படிப்பு காலம் இந்த வருடம் முதல் 2 வருடமாக மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பி.எட், எம்.எட் படிப்பு காலம் இந்த வருடம் முதல் 2 வருடமாக
மாற்றம் செய்யப்படுகிறது. பி.எட். ஆசிரியர் பயிற்சி படிப்பு தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஒரு வருடமாக இதுவரை இருந்து வந்தது. புதிய விதிமுறைகளை வகுத்த என்.சி.டி.இ. இந்த வருடம் பி.எட் ஆசிரியர் பயிற்சியை 2 ஆண்டாக மாற்ற உத்தரவிட்டது. ஒரு சில மாநில அரசுகள் அதனை பின்பற்றி பி.எட் படிப்பு காலத்தை 2 ஆண்டாக மாற்றி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்திலும் அதனை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு தனியார் கல்வியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த கல்வியாண்டில் பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்பை அமல்படுத்த வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என என்.சி.டி.இ. அறிவித்தது. இதற்கிடையில் 2 ஆண்டு படிப்பு காலமாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து கல்விக்குழு தலைவர் விஸ்வநாதன் தலைமையில் கடந்த 19–ந்தேதி நடந்த கூட்டத்தில் பி.எட், படிப்பு மற்றும் எம்.எட் படிப்பு காலம் 2 ஆண்டுகள் என அமல்படுத்துவது மற்றும் என்.சி.இ.டி. குறிப்பிட்டுள்ள அனைத்து பாடப் பிரிவுகளும் அமைத்து தீர்மானிக்கப்பட்டது. அதற்கான பாடத்திட்டங்களுக்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இருந்தாலும் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் சுயநிதி கல்லூரிகள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் தீர்ப்பு வெளியானால் தீர்ப்பின் முடிவின் படி செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்ழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறும் போது, என்.சி.இ.டி. வழிகாட்டுதலின்படி பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2 வருடமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை படிவம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் வழங்குவது குறித்த அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் ஜூலை மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:– பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது போல 2016–17 கல்வியாண்டில் பி.எஸ்.சி., பி.ஏ. பட்டப்படிப்புகளுடன் இணைந்த பி.எட், படிப்பு காலம் 4 ஆண்டுகளாகவும் எம்.ஏ., எம்.எஸ்.சி. முதுகலை படிப்புகளுடன் இணைந்த எம்.எட். ஆசிரியர் பயிற்சி 3 ஆண்டுகளாகவும் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.