WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 22, 2015

இன்னும் சில மாதங்களில் அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள்: பிரதமர் மோடி உறுதி.

இன்னும் சில மாதங்களில் அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள்: பிரதமர்
மோடி உறுதி பதிவு  பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றியபோது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்தார். நாட்டின் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிவறைகளை ஏற்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். இன்னும் 2 மாதங்களில் டெல்லி செங்கோட்டையில் தனது 2-வது சுதந்திர தின உரையை ஆற்றப்போகிற பிரதமர் மோடியிடம், செய்தி நிறுவனம் ஒன்று சிறப்பு பேட்டி கண்டது. அப்போது அவரிடம் அவரது அரசியல் எதிரிகள், ‘மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவாளர், விவசாயிகளுக்கு எதிரானவர், மோடிஅரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு’ என்றுபிரசாரம் செய்து வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அந்த பிரசாரத்தை மறுத்து, தனது அரசு சாமானிய மக்களுக்கு நிறைவேற்றி வருகிற திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் அவர் கூறியதாவது:- தூய்மை இந்தியா திட்டம், ஏழை மக்களின் உடல், சுகாதார பிரச்சினைகள் அவர்களது உழைக்கும் திறன், அதன் வெளிப்பாடை பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. எல்லா பள்ளிக்கூடங்களிலும் கழிவறைகள் கட்டும் திட்டத்தை எடுத்துக்கொண்டுள்ளோம். அடுத்த சில மாதங்களில் இது நிறைவேறி விடும். சாமானிய மக்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களை எல்லாம் செய்ய விடாமல், கடந்த 60 வருடங்களாக தடுத்தது எது? தூய்மை இந்தியா திட்டத்தை பொறுத்தமட்டில், ஒவ்வொரு இந்தியரும் இதில் பங்கெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் தாமாகவே தூய்மையானதாகி விடும். இதை ஒவ்வொருவரும் குறியாகக் கொண்டால், எங்கும் தூய்மை நிலவும். தூய்மை இந்தியா என்னும் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்பாக தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு வழிகளில் மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதுதான் 2019-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை நாடு கொண்டாடுகிறபோது அவருக்கு செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக அமையும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.