WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 25, 2015

1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.

தமிழகம் முழுவதும் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களாக பதவி உயர்வு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல்- பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் -பதவி உயர்வுக் கலந்தாய்வு, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் - பதவி உயர்வு கலந்தாய்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 542 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.