அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பணியாற்றும் ஆசிரியர்
பயிற்றுனர்களுக்கு பரஸ்பர இடமாறுதலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையின் கீழ், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பரஸ்பர இடமாறுதலுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, ஏற்கனவே பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மீண்டும் மாறுதல் கோர இயலாது. கடந்த ஜனவரியில் நிர்வாக மாறுதல் அளிக்கப்பட்டவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரஸ்பரம் மாற்றம் கோரும், இரு ஆசிரியர் பயிற்றுனர்களும் ஒரே பாடப்பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.மாறுதல் கோரும் ஆசிரியர் பயிற்றுனர்கள், விண்ணப்பங்களை வரும், 11ம் தேதிக்கு முன், மாவட்ட அனைவருக்கும் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.