திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் நடத்தும் பயிற்றுநர் (டிரெயினி கோடர்) பதவிக்கான நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறிóது பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா.முத்துக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழகம் நடத்தும் இந்த நேர்முகத் தேர்வில் 2012,13,14,15-ம் ஆண்டுகளில் அறிவியல் பின்புலம் சார்ந்த இளநிலை, முதுநிலைப் பட்டம், பட்டயம்பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான ஆண்டு வருமானம் ரூ.1.20லட்சம் ஆகும். தேர்வு செய்யப்படுவர் சென்னையிலுள்ள ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணிமயர்த்தப்படுவர்.
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து, குறித்த நேரத்தில் தகுந்த தரத்துடன் அறிக்கை தயாரித்து அளிப்பதோடு, தகுந்த தகவல் தொடர்பாற்றலுடைய தகுதி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
விருப்பம் உடையவர்கள தங்களது சுய விவரங்களை ஒரு பக்க அளவில் தயார் செய்து, இம்மாதம் 15-ம் தேதிக்குள் ல்ற்ஸ்ரீ000க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ந. பிரசன்னாவை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.