WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 31, 2015

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைப்பு: டீசல் விலையில் மாற்றமில்லை.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை
குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதேசமயம் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. மேலும் டீசல் விலை 50 குறைக்கப்பட்டது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.