WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 16, 2015

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்.

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து
தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது. இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும். சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலமுறை அலைய நேரிடும். இதனால் கல்விப்பணி பாதிக்கப்படும். தற்போது, வருவாய் துறையில் சான்றுகள் 'ஆன்-லைனில்' வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சான்றுகள் பெற, தலைமை ஆசிரியர்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைவதை தவிர்க்க, 10 முதல் 12 ம் வகுப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு பள்ளியில் பொதுமையம் அமைக்கப்படுகிறது. இப்பொது மையங்களுக்கு தனி 'பாஸ் வேர்டு, ஐ.டி.' வழங்கப்படும். இந்த பொது மையத்திற்கு உட்பட்ட பள்ளிகள், மாணவர்களுக்கான சான்று பெற மனுக்களை வழங்க வேண்டும். அவை 'ஸ்கேன்' செய்யப்பட்டு, 'ஆன்-லைன்' மூலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 'ஆன்-லைனில்' வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மனுவை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு தாசில்தார் டிஜிட்டல் கையெழுத்துடன் சான்று வழங்க பரிந்துரை செய்வார். தாசில்தார் வழங்கும் 3 வகையான சான்றுகளை அந்தந்த பள்ளியிலேயே 'பிரின்ட் -அவுட்' ஆக சான்றுகளை பெற்று கொள்ளலாம். இப் புதிய நடைமுறை யால் தலைமை ஆசிரியர்களுக்கு அலைச்சல் குறையும். சிரமமின்றி பள்ளி மாணவர்கள் சான்றுகள் பெற முடியும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.