வெள்ளம் பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உதவும் வகையில் கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில், 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உதவும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் கற்றல் கையேடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பிளஸ் 2 வகுப்பில் படிப்போருக் காக தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரி யல், புவியியல், வரலாறு, பொரு ளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களுக்கான கற்றல் கையேடுகளும், 10-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய கற்றல் கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
5 மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா கற்றல் கையேடுகளை வழங்கினார். இதை யடுத்து வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் இந்தக் கையேட்டின் மூலம் பயனடையும் வண்ணம், www.tnscert.org என்னும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணைதளத் தில் அது பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.