WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 29, 2016

குரூப் - 2 ஏ தேர்வு விடைகள் வெளியீடு.


தமிழக அரசு துறையில் குரூப் - 2 ஏ மூலம் நிரப்பப்படும் நேர்முகத் தேர்வு அல்லாத 1,947 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, ஜன., 24ம் தேதி நடந்தது; எட்டு லட்சம் பேர் எழுதினர்.இந்த தேர்வில், பொது தமிழ், பொது ஆங்கிலம் மற்றும் பொது கல்வி ஆகியவற்றுக்கு, தலா, 300 மதிப்பெண் என, மூன்று
தாள்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடைகளை, அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இந்த விடையில் தவறுகள் இருந்தால் பிப்., 3ம் தேதிக்குள், டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவிக்கலாம். இதற்கிடையில், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., தேர்வில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் முறையில், மாவட்ட ஒதுக்கீடு, பிப்., 1ம் தேதி, காலை 10:00 மணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.