WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 11, 2016

உதவி பேராசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தம்.


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து பல்கலை மாணவர் சங்க தலைவர் வினோத்குமார் கூறியதாவது: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும்
விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் உட்பட பல பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடந்தது. இதில், பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, இந்த விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை தேவை என, அனைத்து பல்கலை மாணவர் சங்கம் சார்பில், முதல்வர் தனிப் பிரிவில் மனு கொடுக்கப்பட்டது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்குவதற்காக, நேற்று நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் நடக்கவில்லை. தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பணியிடங்களை நிரப்புவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு உதவிய, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.இவ்வாறு வினோத்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.