WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 27, 2016

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்.


முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை. உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்கும் வெவ்வேறான விதமான வினாத்தாள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்வி எண் மாறுபடுவதால் முறைகேடு செய்ய முடியாது.மேலும் தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.