பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.கடந்த 14ம் தேதி வேதியியல் தேர்வு நடந்தது. தேர்வில்
கடினமான வினாக்கள் இடம்பெற்றிருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணியை தள்ளி வைக்க வேண்டும். மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், இன்று நடக்க இருந்த வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மறு தேதி அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.