WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 23, 2016

வேதியியல் தேர்வுக்கு 'போனஸ்' மதிப்பெண்


பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விக்கு ஒரு மதிப்பெண்; பிழையான கேள்விக்கு ஐந்து மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில்
வேதியியல் பாடத்திற்கு மார்ச், 14ல் தேர்வு நடந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாள் கடினமாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் மாணவர்கள் சிந்தித்து எழுதும்வகையில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., கேள்வித்தாள் போல அமைக்கப்பட்டிருந்தது.அதனால், இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும்; தேர்ச்சி விகிதம் குறையும் என, ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இந்த தேர்வில், பாட புத்தகத்தில் இல்லாத கேள்வி, ஒரு மதிப்பெண் பிரிவில் இடம் பெற்றது. அதாவது 'ஏ' வகை கேள்வித்தாளில் 18 மற்றும் 'பி' வகை கேள்வித்தாளில் 17 ஆகிய கேள்விகள் 'அவுட் ஆப் சிலபஸ்' ஆக இருந்தன. அதேபோல் 70வது கட்டாய கேள்வியில், '11' என்ற எண்ணுக்கு பதில், ரோமன் எழுத்து, 'II' இருந்தது. அதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்து சரியான பதில் அளிக்க முடியவில்லை. இது குறித்து நமது நாளிதழில் மார்ச் 15 மற்றும், 21ல் விரிவான செய்திகள் வெளியாகி 'போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என கோரிக்கை விடப்பட்டது. ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தோரும், தேர்வுத்துறை இயக்குனரை சந்தித்து போனஸ் மதிப்பெண் கேட்டனர்.தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இந்த இரண்டு கேள்விகளுக்கும், மொத்தம் ஆறு மதிப்பெண் போனசாக வழங்க உத்தரவிட்டார். 'தேர்வுத் துறையே தவறாக அச்சிட்டத்தால், இது கருணை மதிப்பெண் அல்ல; போனஸ் மதிப்பெண்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.