WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 19, 2016

'கீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்கும் குழுவில் மதுரை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவதற்குள் பத்தாம் வகுப்பு
தேர்வும் துவங்கி விட்டன. மொழிப் பாட தேர்வுகள் முடிந்த பின், விடைத்தாள் திருத்தும் பணிகளும் அடுத்தடுத்து துவங்கின.பத்தாம் வகுப்பில் தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் 'கீ ஆன்சர்' தயாரிப்பில், மதுரை ஆசிரியர் குழு ஏற்கனவே இடம் பெற்றது. தற்போது பிளஸ் 2 தேர்வுகளுக்கான 'கீ ஆன்சர்' தயாரிக்க, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு, மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களில் பாடவாரியாக ஆசிரியர்களை தேர்வு செய்து 'கீ ஆன்சர்' தயாரிக்கப்படும். நான்கு வகையான 'கீ ஆன்சர்'களை ஒப்பிட்டு இறுதி 'கீ ஆன்சர்' முடிவு செய்து, அதன் அடிப்படையில் விடைத்தாள் திருத்தப்படும். இந்தாண்டு அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்க மதுரை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்," என்றார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.