WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 28, 2016

பொது தேர்வு முடிவில் பயமா?'104'ல் சிறப்பு ஆலோசனை.


அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், அச்சமின்றி தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் வகையில், இன்று முதல், '104' சேவையில், சிறப்பு
ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து '104' சேவை மைய, விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:தமிழக சுகாதார திட்டத்தின் கீழ், தொலைபேசி வழியே மருத்துவ தகவல்கள் தரும், 24 மணி நேர, '104' சேவை மையம் செயல்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே முதல் வாரம் வெளியாக உள்ளதால், மாணவர்கள், தேர்வு முடிவுகளை, அச்சமின்றி எதிர்கொள்ளவும், தன்னம்பிக்கையோடு, எதிர்காலத்தில் திட்டமிட்டு வெற்றி பெறவும் வழிகாட்டும், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, மூன்று உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பெற்றோர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; மாணவர்கள் தவறான முடிவுகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.