WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 27, 2016

100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்? மின்சார வாரியம் அறிவிப்பு.


தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சார இலவசம் என்ற அறிவிப்பையடுத்து, மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதனையடுத்து மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதிக்குப் பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இந்நிலையில் மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை எவ்வாறு கணக்கிடுவது என்று பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து மின்சாரத்தை கணக்கிடுவது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. கணக்கீட்டு முறை: மின்சார வாரியம் 0 - 200, 201 - 500, 501 - 1100 வரை என்று மூன்று பிரிவுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கிறது. புதிய சலுகையின்படி இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 0 - 200 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 120 யூனிட் பயன்படுத்தினால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம். மீதம் உள்ள 20 யூனிட்டுக்கு ரூ 1.50 வீதம் ரூ. 30, நிரந்தரக் கட்டணம் ரூ. 20 சேர்த்து ரூ. 50 செலுத்த வேண்டும். இதே போன்று 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்டை கழித்தது போக மீதி உள்ள யூனிட்டுக்கு ரூ. 1.50 கட்டணத்தில், நிரந்தரக் கட்டணம் ரூ 20 சேர்த்து வசூலிக்கப்படும். 201 - 500 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். அடுத்த 101 - 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட் ரூ. 2 என்ற அடிப்படையில் ரூ. 200, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ.3 என்ற அடிப்படையில் ரூ. 900, அதனுடன் நிரந்தக் கட்டணம் ரூ. 30 சேர்த்து, மொத்தம் ரூ. 1130 வசூலிக்கப்படும். 501 - 1,100 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 1,100 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 101 - 200 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ. 3.50 என்ற அடிப்படையில் ரூ. 350, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ.4.60 என்ற அடிப்படையில் ரூ. 1,380, 501 - 1,100 வரை ஒரு யூனிட் ரூ. 6.60 என்ற அடிப்படையில் ரூ. 3,960, நிரந்தரக் கட்டணம் சேர்த்து ரூ. 50 சேர்த்து, மொத்தம் ரூ. 5,740 வசூலிக்கப்படும். 100 யூனிட் மின்சார சலுகை அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோர்களுக்கும் கிடைக்கும். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கணக்கிடப்பட்ட மின்கட்டண விவரம் யூனிட் -மின்கட்டணம் (ரூபாயில்) 120 - 50 160 - 110 200 - 170 250 - 380 300 - 530 450 - 980 500 - 1,130 650 - 2,770 800 - 3,760 950 - 4,750 1,100 - 5,740

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.