WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 31, 2016

மருத்துவ படிப்புகளுக்கு 17 ஆயிரம் விண்ணப்பம்.

ஐந்து நாட்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 17 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில், அரசு, சுயநிதி கல்லூரிகள், இ.எஸ்.ஐ., கல்லூரியையும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,788 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதற்கு, மே, 26 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாளான ஞாயிறு அன்றும், விண்ணப்பங்கள் தரப்பட்டன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதால், ஐந்து நாட்களில், 17,090 விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்கள், ஜூன், 6ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. இது தவிர, விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க, ஜூன், 7 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.