WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 31, 2016

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் 41 அரசு
பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் பொறியியல் பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. 2016-17-ம் கல்வி ஆண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விண்ணப்பம் வாங்கிய பாலிடெக்னிக் கல்லூரியில் ஜுன் மாதம் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.