சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கான ஆரம்ப நிலை நேர்காணல் சென்னை, மதுரையில் ஜூன் 6, 7 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள தொழில், செயல்
வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் (என்.ஆர்.எச்.எம்.) கீழ் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ பட்டப் படிப்புகளை முடித்தவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தாற்காலிக பணியில் காலியிடங்கள் உள்ளன.
இந்தக் காலியிடங்களுக்கான உத்தேச பதிவுமூப்பு தேதி ("டென்டேட்டிவ் கட்-ஆஃப் டேட்') உள்ளிட்ட விவரங்களை www.chennai.nic.in என்ற இணையதளம் மூலம் அறியலாம்.
ஜூன் 6, ஜூன் 7-இல்...:சென்னை கிண்டி, மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்புக் கிளை அலுவலகத்தில் உத்தேச பதிவு மூப்புக்குள் பதிவு செய்தவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள அலுவலகத்தில் ஜூன் 6, 7 ஆகிய நாள்களில் காலை 10 மணி அளவில் ஆரம்ப நிலை நேர்காணலுக்கு நேரில் அணுகலாம்; அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வி, ஜாதிச் சான்றுகளுடன் முன் ஆரம்ப நிலை நேர்காணலுக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்தப் பதவியில் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்கள் உத்தேச பதிவுமூப்பிற்குள் இடம் பெற்றிருப்பினும் இந்த ஆரம்ப நிலை நேர்காணலில் பங்குகொள்ளத் தேவையில்லை.
இது ஒரு உத்தேச பதிவுமூப்பு அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கை ஆகும். பதிவுதாரர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் நேர்வில் இறுதியான ஒருங்கிணைந்த பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டு வேலை அளிப்பவருக்கு அளிக்கப்படும். இறுதி பதிவுமூப்பு பட்டியல் விவரம் www.chennai.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.