WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 27, 2016

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பா?


தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் திறக்கப்படுகின்றன. சில நாட்களாக தமிழகத்தில் பல நகரங்களில்
வெயில் 38 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது.எனவே, பள்ளிகளின் கோடை விடுமுறையை, ஜூன் 8ம் தேதி வரை நீட்டிக்க, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். ஆசிரியர்களும், இதே கருத்தை வலியுறுத்தி, கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவிடம் மனு அளித்துள்ளனர். எனவே, கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து, அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பள்ளிக்கல்வி செயலர் சபிதாவிடம் கேட்ட போது, ''பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுவது குறித்து, இன்னும் கல்வித் துறை எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவுகள் எடுத்தால், அதை ஊடகங்கள் வாயிலாக உடனடியாக தெரிவிப்போம்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.