தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால், பி.எட்., முடித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டாய கல்விச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இடைநிலை
ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு கடந்த 2012,13 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியுள்ளது. 2014, 15ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கவில்லை. இதனால் பி.எட்., படித்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டிலாவது டி.இ.டி., தேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில்,“ பி.எட்., முடித்த ஆயிரக்கணக்கான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் ஜெ.,க்கு கடிதம் அனுப்பிஉள்ளோம்,” என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.