2016-17-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது: ஜூன் 1-ம் தேதி அனைத்து தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும். பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே அரசு நலத்திட்டங்களான விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட வேண்டும். விலையில்லா பேருந்து பயண அட்டைகள் தேவைப்படும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயண அட்டைகள் பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, சுத்த மான குடிநீர் பயன்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டிடங்கள், புல் புதர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.