தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப்
பட்டியல் வெளியிடப்படும்.
ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்ப படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க ஜூன் 17 கடைசித் தேதியாகும். மொத்தம் 18,302 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தனர். 2015-2016-ஆம் கல்வியாண்டில் 16,715 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்திருந்தனர்.

அதனையடுத்து கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 12,443 பேரும், பி.டெக் உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 1,787 பேரும், பி.டெக் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு 880 பேரும், பால்வளத் தொழில்நுட்ப படிப்புக்கு 1,543 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்களை பரிசலீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்ததும் ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.