பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் இலவச பஸ் பாசை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு: பஸ் படிக்கட்டில்
மாணவர்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதை தடுப்பது அவசியம். 'மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது' என ஆசிரியர்கள் விளக்க வேண்டும். முதல் முறையாக படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இந்த தவறை செய்தால், இலவச பஸ் பாசை, பள்ளி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.