WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 17, 2016

குரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததால் மாணவர்களுக்கு சிக்கல்.


டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மாதிரிவினாத்தாள் வெளியிடப் படாததால் மாணவர்கள் தேர்விற்கு தயாராக சிரமப்படுகின்றனர். சார்பதிவாளர், நகராட்சி
ஆணையர், வருவாய் ஆய்வாளர், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், இளைநிலைவேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,241 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 எழுத்துதேர்வு கடந்தாண்டு ஜூலையில் நடந்தது. இதன் முடிவுகள் மே மாதத்தில் வெளியானது. இத்தேர்வில் வெற்றிபெற்ற 12,337 பேருக்கு புதிய வினாத்தாள் முறையில் ஆகஸ்ட் 21ல் மெயின் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.கடந்த முறை மெயின்தேர்வு 120 வினாக்கள் கொள்குறி வகையில் கேட்கப்பட்டிருந்தது. புதிய முறையில் எவ்விதம் கேள்விகள் கேட்கப்படும் என்ற முழு விபரத்தை தெளிவுபடுத்தி வினாத்தாளின் மாதிரி அமைப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிடாததால், மாணவர்கள் மெயின்தேர்விற்கு தங்களை தயார் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயக்குடி இலவச பயிற்சிமைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில்,“குரூப்-2 மெயின்தேர்வு முதல்முறையாக விரிவாக விடை அளிக்கும்படி மாற்றப்பட்டுள்ளதால், குரூப்-1 மெயின் தேர்வு போல 3 மதிப்பெண், 5 மதிப்பெண், 15 மதிப்பெண் என்ற அடிப்படையில் வினத்தாள் அமையுமா அல்லது வேறுமாதிரி இருக்குமா என மாணவர்களுக்கு குழப்பம் உள்ளது. ஆகையால் டி.என்.பி.எஸ்.சி., குருப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள் அமைப்பை வெளியிட்டால் மாணவர்கள் சிரமம் இன்றி தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்,”என்றார்.    

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.