WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 30, 2016

சென்னை பல்கலை தேர்வு இன்று 'ரிசல்ட்' வெளியீடு.


சென்னை பல்கலையின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதுகுறித்து, பல்கலையின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஏப்ரலில் நடந்த, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வு
முடிவுகள், ஜூன், 30ல் வெளியாகின்றன. மாணவர்கள், www.results.unom.ac.in/, www.ideunom.ac.in/மற்றும் egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவை அறியலாம். முதுகலை படிப்புக்கான தேர்வர்கள், மறுமதிப்பீடுக்கும், இளங்கலை படிப்புக்கான தேர்வர்கள், மறுகூட்டலுக்கும், நாளை முதல், வரும், 8ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளங்கலை மாணவர்கள், ஆறாவது பருவ தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தாலோ, முதுகலை மாணவர்கள், 4வது பருவ தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தாலோ, உடனடி துணைத்தேர்வுக்கு, ஜூலை, 1ம் தேதி முதல், 8ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உடனடி துணைத்தேர்வு, ஜூலை, 23ம் தேதி, மூன்று மையங்களில் மட்டும் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.