WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 30, 2016

கல்வி உதவித்தொகை பெற 'ஆதார்' எண் கட்டாயம்.


மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கட்டாயம், 'ஆதார்' எண் இருக்க வேண்டும்' என, மத்திய பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில், பல்கலை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், தலித், சிறுபான்மை
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல், மத்திய அரசின் அனைத்து உதவித்தொகையையும், நேரடி பயனாளி திட்டத்தின் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, ஒரு சுற்றறிக்கையை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு உத்தரவுப்படி, அனைத்து மானியம் மற்றும் உதவித்தொகைகளை நேரடியாக பயனாளிகளுக்கே வழங்க வேண்டும். எனவே, இந்த ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை பெற, மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.