WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 7, 2016

சம்பளம் ஓரிடம்; பணி வேறிடம்: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.


தமிழகத்தில் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், அரசு உதவிபெறும் கல்லுாரிகள், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் போன்றவற்றில், குறைந்த சம்பளத்தில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை, தனியார் கல்லுாரிகள் பல பணிகளுக்கு பயன்படுத்துகின்றன. குறிப்பாக, தங்கள்
நிறுவனத்தை சேர்ந்த மற்ற பள்ளி, கல்லுாரிகளில், பேராசிரியர்களை பாடம் எடுக்க பயன்படுத்துகின்றனர். பேராசிரியர்களும், வேறு வழி இல்லாமல் தங்கள் நிறுவனம் உத்தரவிட்டபடி, ஒரு கல்லுாரியில் பணிக்கு சேர்ந்து விட்டு, நிறுவனம் சார்ந்த மற்ற பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, பேராசிரியர்கள் தரப்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதை விசாரித்தபோது, புகாரில் உண்மை இருப்பது, பல்கலைக்கு தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் தங்கசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சில ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி நிர்வாகங்கள், தங்கள் பேராசிரியர்களை, வேறு கலை, அறிவியல் கல்லுாரி, நர்சிங் கல்லுாரிகளில் பாடம் எடுக்க கட்டாயப்படுத்துவதாக புகார் வந்துள்ளது. இது, விதிகளுக்கு எதிரானது. தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சிலின் விதிகளை மீறி, பேராசிரியர்களை மற்ற நிறுவனங்களுக்கு பயன்படுத்தினால், அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.