Sunday, August 14, 2016
57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு.
தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதே போல் 10-ம் வகுப்பு வரை படிக்க அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்ககம் என்ற ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் நாடு முழுவதும் 6 முதல் 12 வயதிற்குட்பட்டோரில் 61 லட்சம் பேர் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதில் 26.65 லட்சம் பேர், 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோர். கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட 57 ஆயிரத்து 229 பேர் 5-ம் வகுப்பிற்கு பின், பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.