WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 15, 2016

நீட்' தேர்வு 'ரிசல்ட்' எப்போது?


எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், அடுத்த
வாரம் வெளியாகும் என தெரிகிறது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மருத்துவ படிப்பில் சேரவும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் அரசு கல்லுாரிகளில் சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மற்ற மாநிலங்களில், அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லுாரிகளில் சேரவும், மருத்துவ படிப்பில் சேரவும் நீட் தேர்வு கட்டாயம். மே, 1ல் முதற்கட்டமாகவும்; ஜூலை, 24ல் இரண்டாம் கட்டமாகவும் நீட் தேர்வு நடந்தது. இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள், இரு தினங்களுக்கு முன், ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரு வாரத்திற்குள், நீட் தேர்வு முடிவு வெளியாகலாம் என தெரிகிறது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.