Thursday, September 15, 2016
செட்' தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை.
செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், 'செட்' என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.
'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில் பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; 'நெட்' தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.
அதன்பின் நடந்த, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 'செட்' தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.