WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 19, 2016

கற்றலில் குறைபாடு:டிச.2 -இல் தேசிய மாநாடு.

கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) குறித்த தேசிய மாநாடு சென்னையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் சென்னை ஐஐடியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கற்றலில் குறைபாட்டை சிறு வயதிலேயே நிர்வகிப்பது, பள்ளி, கல்லூரி கல்வி, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரியோர்களை நிர்வகிப்பது, அவர்களின் திறனை வளர்ப்பது, தொழிற்பயிற்சி அளிப்பது, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், குடும்பத்தினருக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. ஆர்கிட்ஸ் அமைப்பின் தலைவர் டாக்டர்.கீத் ஓபராய், செகந்தரபாத் தேசிய மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர் தேசிய நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி நாராயண் உள்ளிட்ட பல வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்வதற்கு 98411 10588 என்ற எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.